20 ஆண்டுகள் தடைக்குப் பிறகு... அமெரிக்காவின் இந்த உணவு அவுஸ்திரேலியாவில் விற்பனை
அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடையை அவுஸ்திரேலியா உத்தியோகப்பூர்வமாக நீக்கியுள்ளதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று வெற்றி என்று பாராட்டியுள்ளார்.
அதிகமாக விற்கப் போகிறோம்
அமெரிக்கா இனி தங்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த இறைச்சியை அவுஸ்திரேலிய மக்களுக்கு விற்பனை செய்யும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,
பல வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியா அமெரிக்க மாட்டிறைச்சியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது! நீண்ட காலமாக, நாங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தபோதிலும், அவர்கள் உண்மையில் எங்கள் மாட்டிறைச்சியைத் தடை செய்தனர்.
தற்போது, நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு மிக அதிகமாக விற்கப் போகிறோம், ஏனென்றால் இது அமெரிக்க மாட்டிறைச்சி முழு உலகிலும் பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்பதற்கான மறுக்க முடியாத சான்று என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தங்களின் அற்புதமான மாட்டிறைச்சியை தடை செய்த பிற நாடுகளையும் அவர் எச்சரித்துள்ளார். எங்களது அற்புதமான மாட்டிறைச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள் அனைத்தும் எங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக
இரு நட்பு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் வர்த்தக விவாதங்களுக்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து இறைச்சி ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வர்த்தகத்தில் நீண்டகாலமாக நிலவும் ஏற்றத்தாழ்வை எதிர்த்து அவுஸ்திரேலிய பொருட்களுக்கு 10% அடிப்படை இறக்குமதி வரியை ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதால் அவுஸ்திரேலியா பயனடைவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக 2000 களின் முற்பகுதியில் இருந்து அமெரிக்க மாட்டிறைச்சியை அவுஸ்திரேலியா தடை செய்து வந்தது.
தடை நீக்கப்பட்ட இந்த முடிவு தற்போது இரண்டு நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான வர்த்தக தொடர்புகளில் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும், இந்த முடிவு தற்போது அமெரிக்க மாட்டிறைச்சி உற்பத்தியாளர்கள் அவுஸ்திரேலிய சந்தைகளில் நுழைய அனுமதிக்கும், இது நியூசிலாந்து மற்றும் உள்நாட்டு இறைச்சிக்கு போட்டியை ஏற்படுத்தும். இதனால் உகந்த விலையில் நுகர்வோருக்கு இறைச்சி கிடைக்கும் என்றே நம்ப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |