அமெரிக்க பத்திரிக்கையாளரை விடுவிக்க மறுக்கும் ரஷ்ய நீதிமன்றம்: வலுக்கும் எதிர்ப்புகள்
ரஷ்யாவில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை விடுவிக்க ரஷ்ய நீதிமன்றம் மறுத்துள்ளது.
அமெரிக்க பத்திரிக்கையாளர் கைது
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போருக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
@ap
மேலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான தங்களது வணிக தடையை நிறுத்திய போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ரஷ்யாவிற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வரும் பத்திரிக்கையாளர்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை நிருபரான எவன் ஜெர்ஷ்கோவ்ச்(Evan Gershkovich) என்பவரை கைது செய்து, Yekaterinburgல் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
உலக நாடுகள் கண்டனம்
இதனை தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளருக்கு எதிராக உளவு பார்த்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் குறிப்பிட்ட ஆதாரங்கள் எதையும் ரஷ்ய அதிகாரிகள் விரிவாக தெரிவிக்கவில்லை. சட்ட நடவடிக்கை குறித்தும் தகவல்கள் வெளியிடவில்லை.
@ap
பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டு அபாண்டமானது, அவரது கைது தவறானது என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் எவன் ஜெர்ஷ்கோவ்ச் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு மூன்று மாத காலம் தண்டனையை நீடித்துள்ளது.
@afp
இதனிடையே ஜெர்ஷ்கோவ்ச் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜரானாரா? அவர் என்ன சொன்னார் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் ஜெர்ஷ்கோவ்ச் கைது செய்யப்பட்டது அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.