4 ஆயிரம் அடி ஆழ குகையில் சிக்கிய நபர்: அமெரிக்க மலையேற்ற வீரர் 10 நாட்களுக்கு பிறகு மீட்பு
துருக்கியின் டார்ஸ் மலைத்தொடர் பகுதியில் உள்ள குகைகளில் ஆராய்ச்சி பணிகளுக்காக இறங்கிய போது உடல்நலக் குறைவுக்கு உள்ளான மார்க் டிக்கி என்பவர் பத்து நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
3000 அடி ஆழத்தில் சிக்கிய கொண்ட ஆராய்ச்சியாளர்
உலகில் உள்ள குகைகளை ஆராய்ச்சி செய்ய கூடிய நபராக அமெரிக்காவின் மார்க் டிக்கி(40) என்பவர் பார்க்கப்படுகிறார்.
இவர் குகை மீட்பு பணி நிபுணராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் தெற்கு துருக்கியின் டார்ஸ் மலைத்தொடர் பகுதியில் உள்ள மோர்கா குகை பகுதியில் ஆய்வு செய்வதற்காக இறங்கியுள்ளார்.
சுமார் 4000 அடி ஆழம் கொண்ட அந்த குகையில் அவருடன் சில இயற்கை நல ஆர்வலர்களும் இறங்கியுள்ளார்.
Mark Dickey.via Facebook
இந்த குழு குகையின் 3000 அடி உயரத்தில் சென்று கொண்டு இருந்த போது ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி-க்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரால் குகையை விட்டு வெளியேறி வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் அவருடன் சென்ற குழுவினர் உடனடியாக பேரிடர் மீட்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட மார்க் டிக்கி
இந்நிலையில் மார்க் டிக்கி-ஐ பத்திரமாக உயிருடன் மீட்பதற்காக ஹங்கேரி, துருக்கி, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளை சேர்ந்த 200 மீட்பு குழுவினர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர்.
AP
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு மார்க் டிக்கி மீட்பு படை குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார், அத்துடன் வெளிவந்த மார்க் டிக்கி-க்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |