ஆப்கன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் அமெரிக்க ராணுவ வீரர்கள்! நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ
ஆப்கன் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற காபூல் விமானத்தில் பல நாட்களாக பசி, தூக்கமின்றி காத்து கொண்டிருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களும் தாலிபான்களின் வசம் சென்றுள்ளதால் அங்குள்ள மக்களின் நிலை பரிதாபமாக காட்சியளிக்கிறது.
தாலிபான்கள் குழந்தைகள், பெண்கள் என்று கூட பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சியை அமைக்க ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஆப்கன் மக்கள் உயிருக்கு பயந்து அமெரிக்க ராணுவ படை உதவியை பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் உலகம் மத்தியில் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்தில் பல நாட்களாக பசியோடு காத்திருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட உணவு, தண்ணீர் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் காட்சி பயங்கர வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.