தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன?
அமெரிக்க பெண் ஒருவருக்கு இரண்டு கருப்பு நிற குழந்தைகள் பிறந்ததாக சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ காட்சிகள் குறித்த உண்மை தன்மை தற்போது வெளியாகியுள்ளது.
சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ
அமெரிக்க பெண் ஒருவருக்கு இரண்டு கருப்பு நிற குழந்தைகள் பிறந்து இருப்பதாகவும், அவற்றை கண்டு அவரது கணவர் அதிர்ச்சியும் கோபமும் அடைவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் சமீபத்தில் பரவின.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலில், சம்பந்தப்பட்ட பெண் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பிறகே இது நடந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி AI வீடியோ என்று தெரியவந்துள்ளது.
வைரலான போலி கதை
X தளப் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், மருத்துவமனையில் பிரசவம் ஆன பெண் ஒருவர் இரண்டு கருப்பு நிற குழந்தைகளுடன் இருப்பதையும், அவரது கணவர் கோபமாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அந்த வீடியோவில் பேசிய கணவர், என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றதாகவும், அப்போது தன்னுடைய மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அதில் குற்றச்சாட்டுகிறார்.
இந்நிலையில் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வீடியோ முழுக்க முழுக்க AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று “Grok” உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ டிக் டாக் பக்கத்தில் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட AI வீடியோ என்றும், இது கற்பனையே, உண்மை சம்பவம் இல்லை என்றும் “Grok” விளக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |