படகு விபத்தில் 16 மாணவர்கள் இறந்தது விபத்தல்ல கொலை! வதோதரா காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டு
இந்தியாவின் குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்தை கொலையாக பார்ப்பதாக, வதோதரா மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் அமி ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தின் வதோதரா நகரில் படகு சவாரி செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், நீதிபதி விசாரணை வதோதரா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
மேலும் FIR பதிவு செய்யப்பட்டு இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வதோதரா மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் அமி ராவத், 'இது விபத்து அல்ல, கொலை செயலாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த சம்பவத்தை நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். இது அப்பட்டமான அலட்சிய செயல்.
படகில் Life Jacket, Life Guards இல்லை. இதற்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016யில் ஒப்பந்ததாரர்களுக்கு இத்திட்டம் ஒதுக்கப்பட்டபோது, நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |