ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்.., மோடியும் புடினும் தொலைபேசியில் என்ன பேசினார்கள்?
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
என்ன விவாதம்?
உக்ரைன் மோதல் மற்றும் இந்தியா-ரஷ்யா எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தம் தொடர்பான விடயங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளது.

புற்றுநோயிலிருந்து மீண்டு.., முதல் முயற்சியிலேயே 720க்கு 715 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் முதலிடம்
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புடினின் தொலைபேசி உரையாடல் உற்று நோக்கப்படுகிறது.
வர்த்தகம், பொருளாதாரம், முதலீட்டு ஒத்துழைப்பு குறித்து பேசிய மோடி மற்றும் புடின் மாஸ்கோவிற்கு டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் வருகை மற்றும் உக்ரைன் மோதல் ஆகியவை குறித்தும் பேசியுள்ளனர்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது X தளத்தில் அதிபர் புடினுடன் பேசியது குறித்து கூறுகையில், "எனது நண்பரான அதிபர் புடினுடன் நல்ல உரையாடலை நடத்தினேன்.
இந்தியா மற்றும் ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினோம்" என்றார்.
மேலும், "ரஷ்யா-இந்தியா இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பிரச்சினைகள், சிவில் விமான உற்பத்தி, உலோகவியல் மற்றும் வேதியியல் தொழில் உள்ளிட்ட பிற துறைகளில் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதித்தன" என ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |