இலங்கையில் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார்! திரிபுரா முதல்வர் பரபரப்பு தகவல்
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்தில் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் Biplab Deb தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று திரிபுராவுக்கு விஜயம் செய்தபோது, Rabindra Satabarshiki Bhavan-ல் நடந்த கூட்டத்தில் அமித் ஷா இவ்வாறு கூறியதாக Deb கூறினார்.
Biplab Deb கூறியதாவது, மாநில விருந்தினர் மாளிகையில் கட்சி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக தனது அரசாங்கத்தை அமைத்துள்ளது என்று அஜய் ஜம்வால் (பாஜகவின் வடகிழக்கு மண்டல செயலாளர்) கூறினார்.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, இப்போது இலங்கையும் நேபாளமும் எஞ்சியுள்ளதாக கூறினார். இலங்கையில், நேபாளத்தில் கட்சியை விரிவுபடுத்தி, அரசாங்கத்தை அமைப்பதற்காக இரு நாடுகளில் வெற்றிபெற வேண்டும் என்றார்.
திரிபுரா முதலமைச்சர் மேலும் கூறுகையில், கேரளாவில், பாஜக அதன் தலைமையில் அரசாங்கத்தை நிறுவுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல், வரவிருக்கும் தேர்தல்களில் மேற்கு வங்க மக்கள் டி.எம்.சி தலைவர் மம்தா பானர்ஜியை தேற்கடித்து வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றும், தமிழகம் உட்பட நாடு முழுவதும் ‘தாமரை மலரும்’ என்றும் Biplab Deb நம்பிக்கை தெரிவித்தார்.
திரிபுரா முதலமைச்சர் பொதுக் கூட்டத்தில் அளித்த அறிக்கைகள் குறித்து பாஜக மத்திய தலைமையிடம் தெளிவுபடுத்த மாநிலத்தின் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.