கொட்டும் முடியை வேரோடு நிறுத்தி, முழங்கால் வரை வளர வைக்கலாம் - எப்படி தெரியுமா?
பொதுவாகவே முடி உதிர்தல் பிரச்சனையால் பெண்கள் அனைவரும் சிரமப்படுகிறார்கள்.
முடி உதிர்வை குறைக்கவும், முடி நீளமாக வளரவும் பல நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கம்.
விலையுயர்ந்த ஷாம்பூக்கள் மற்றும் எண்ணெய் மருந்துகளை பயன்படுத்தி முடி உதிர்வதை தடுகின்றனர்.
அதற்கு பதிலாக எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல் எப்படி முடி உதிர்வதை தடுக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முடி உதிர்வை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, நெய், நெல்லிக்காய் மற்றும் கற்கண்டு கலந்து சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதித்து, இன்று பிரமாண்டமான உணவகத்தை நடத்தும் 6 வீரர்கள் - யார் யார் தெரியுமா?
இந்த மூன்று விஷயங்களும் முடி உதிர்வைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் வாத பித்த தோஷம் அதிகரிக்கும் போது, அடிக்கடி முடி உதிர்தல் ஏற்படுகிறது.
நெல்லிகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் முடியை வலுப்படுத்துவதோடு முடி உதிர்தலையும் தடுக்கிறது.
இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களை வலுவாக்கும். நெய்யில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஏ முடியை வலுவாக்கும்.
இதை எப்படி தயார் செய்யலாம்?
தேவையான பொருட்கள்
-
பசுவின் நெய்
-
ஒரு ஸ்பூன் கற்கண்டு
- ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள்
செய்முறை
-
இந்த கலவையை செய்ய, ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்.
-
அதில் நெல்லிக்காய் தூள் சேர்க்கவும்.
-
அடுத்து அதில் கற்கண்டு சேர்த்து நன்றாக கிளறவும்.
- வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். மேலும் உங்கள் முடி உதிர்தல் நிற்கும் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |