Apple ஸ்டோரில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்., பிரபல ஐரோப்பிய நாட்டில் பரபரப்பு
நெதர்லாந்தில் உள்ள Apple Store ஷோரூமில் துப்பாக்கியுடன் நுழைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைக்குள் இருந்த ஒருவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், Leidseplein பகுதியில் உள்ள Apple Store ஷோரூமில் உள்ளூர் நேரப்பபடி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாடிக்கையாளர் என நம்பப்படும் மற்றோருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது தெரிகிறது. மேலும், சம்பவ இடத்திலிருந்த சாட்சிகள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான (சிறப்பு) பிரிவுகளுடன் ஆயுதமேந்திய பொலிஸார் அந்த ஷோரூமை தற்போது சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது..