பிரபல ஐரோப்பிய நாட்டில் மீண்டும் நாடு முழுவதும் புதிய கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகம்! அரசு அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா பரவலை தடுக்க பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலியில் நாடு முழுவதும் 3 நாட்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் நாளொன்றுக்கு 20,000 புதிய தொற்றுகள் பதிவாகி வரும் நிலையில் அனைத்து பகுதிகளும் தற்போது கட்டுப்பாடுகளின் அதிகபட்ச நிலையான சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ், அனைத்து அத்தியாவசிய கடைகள் மூடப்படும், கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே இருக்கும்.
அத்தியாவசிய பயணங்களுக்கு தடை, ஆனால் ஈஸ்டர் விடுமுறை நாளை முன்னிட்டு மக்கள் தங்கள் பகுதிக்குள் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் திறந்திருக்கும், ஆனால் மக்கள் தங்கள் பகுதிக்குள் இருக்கும் தேவாலயங்களுக்கு மட்டும் தான் செல்ல அனுமதி.
3 நாள் ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன், இந்த மாத இறுதிவரை பல பகுதிகளில் தொடர்ந்து ஆரஞ்சு அல்லது சிவப்பு மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட கூடுதலாக 70,000 பொலிஸ் அதிகாரிகளை களமிறக்கியுள்ளதாக இத்தாலி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
