ஐ.நா. சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகன்ஷா ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக தனது வேட்புமனுவை அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகன்ஷா (34) உலகின் உயர்மட்ட தூதர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஜனவரி 2022 முதல் தனது இரண்டாவது ஐந்தாண்டு கால அவகாசத்தை எதிர்பார்க்கும் தற்போதைய தலைவர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு (71) எதிராக அகன்ஷா போட்டியிடுகிறார்.
அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.நா.வின் முதல் பெண் பொதுச்செயலாளராக முத்திரை பதிப்பார்.
அரோரா அகன்ஷா தனது பிரச்சாரத்தை #AroraForSG இந்த மாதத்தில் தொடங்கினார். அவரது பிரச்சார வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அவரது பிரச்சாரத்தில், "75 ஆண்டுகளாக, ஐ.நா உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவி மிகக் குறைவு மற்றும் தொழில்நுட்பமும் புதுமையும் பின்னடைவில் உள்ளது" எனகே கூறினார்.
இவ்வளவு தான் ஐ.நா. செய்யமுடியும் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், "நமக்கு இதை விட சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஐ.நா. தேவை. அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன்" என்கிறார்.