பிரான்சில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு அவசர செய்தி...
பிரான்சில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு அவசர செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், வாகனம் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குமுன் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்ன காரணம்?
பிரான்சில் வாகனங்கள் வைத்திருப்போர், அரசு அளித்துவரும் எரிபொருள் மீதான சலுகை, இம்மாதம், அதாவது டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், அந்த சலுகை முடியும் முன் அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த சலுகை 2023 துவங்கும் நேரத்தில் காலாவதியாகிவிடும் என ஏற்கனவே நவம்பர் மாதத்தில் பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது.
என்ன சலுகை?
எரிபொருள் விலை, லிற்றருக்கு 0.10 யூரோக்கள் குறைக்கப்பட்டதுதான் அரசு வழங்கிய சலுகை.
இந்த சலுகை முடிவடைந்தபின், சாரதிகள் டிசம்பர் விலையைவிட கூடுதலாக 5 யூரோக்கள் எரிபொருளுக்கு செலவிடவேண்டியிருக்கும்.
ஆனால், அதற்குப் பின், குறைந்த வருவாய் கொண்ட சாரதிகளுக்கு, 100 யூரோக்கள் எரிபொருள் உதவித்தொகை ஒன்று வழங்கப்பட உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Photo by JULIEN DE ROSA / AFP