ஒன்றாக உணவு அருந்திய உலகின் பெரும் பணக்காரர்கள்: ஆனந்த் மஹிந்திராவின் மனைவிக்கு உருவான சந்தேகம்
உலகின் முன்னணி பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில், இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் மனைவிக்கு வித்தியாசமான சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.
எலான் மஸ்க்-பெர்னார்ட் அர்னால்ட் சந்திப்பு
உலகின் டாப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர், டெஸ்டா, மற்றும் நியூரோலிங் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 233பில்லியன் டாலராக உள்ளது.
மறுபுறம் உலகின் இரண்டாவது பணக்காரராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் திகழ்கிறார்.
இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 202 பில்லியன் டாலராகும். கடந்த சில மாதங்களாக உலகின் முதல் பணக்காரராக பெர்னார்ட் அர்னால்ட் இருந்து வந்த நிலையில், எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை சமீபத்தில் பிடித்தார்.
பெர்னார்ட் அர்னால்ட் பிரபல LVMH தொழில் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Instagram/antoinearnault
இந்நிலையில் உலகின் முதல் இரண்டு பணக்காரர்களும் பிரான்ஸில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
விவா டெக்னாலஜி நிகழ்ச்சிக்காக எலான் மஸ்க் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்க்கு வந்த இருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஆனந்த மஹிந்திரா மனைவியின் வித்தியாசமான சந்தேகம்
உலகின் முதல் இரண்டு பணக்காரர்களும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பல விவாதங்களையும் கேள்விகளையும் உலக அளவில் எழுப்பியுள்ளது.
My wife was wondering who paid for the lunch…@elonmusk https://t.co/NIsPR4o9Oj
— anand mahindra (@anandmahindra) June 18, 2023
அந்த வகையில் இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் மனைவிக்கு இருவரின் சந்திப்பு குறித்து வித்தியாசமான சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது எலான் மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் சந்திப்பை தொடர்ந்து இருவரும் ஒன்றாக மதிய உணவு அருந்தினர், ஆனால் இந்த மதிய உணவுக்கான செலவினை இருவரில் யார் ஏற்றது என்ற சந்தேகம் தனது மனைவிக்கு எழுந்துள்ளதாக ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு இணையவாசிகள் பலர் சுவாரஸ்யமான பல பதில்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |