140 கிமீ பாதயாத்திரையாக செல்லும் ஆனந்த் அம்பானி
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 140 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக செல்ல உள்ளார்.
30வது பிறந்தநாள்
இந்தியா மட்டுமில்லாமல் உலகளவிலும் பெரும் பணக்காரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி.
இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், தனது 30வது பிறந்தநாளை வரும் 10ஆம் திகதி ஆனந்த் அம்பானி கொண்டாடுகிறார்.
பாதயாத்திரை
இதனை முன்னிட்டு கோயிலுக்கு பாதயாத்திரை செய்ய இவர் முடிவு செய்துள்ளார். ஜாம் நகரில் இருந்து துவாரகா கோவிலில் தரிசனம் செய்ய, 140 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரையாக செல்ல உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஆனந்த் அம்பானி ஒவ்வொரு இரவும் 10 முதல் 12 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல உள்ளார்.
தனது பணியாளர்களுடன் பலத்த பாதுகாப்பிற்கு இடையே, ஆனந்த் அம்பானி இதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |