பிரமாண்டமாக நடைபெறும் அம்பானி வீட்டு திருமணம் - விருந்தினருக்கு வழங்கும் பரிசு என்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு இன்று வெகுவிமர்சையாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் இன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்? இதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
30 நாட்களில் முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?
அதற்கு முன்னதாக முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
குறித்த இரண்டு கொண்டாட்டத்திலும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

திருமண வாரம் தொடங்கியவுடன் பல நிகழ்சிகள் நடைபெற்றது. சங்கீத் போன்ற பல சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அதிலும் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்துக்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண ஏற்பாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தங்குமிடங்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஆடம்பர பரிசுகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களும் விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு பரிசுப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜாம்நகர் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள், ரிஹானாவின் (Rihanna) தனிப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
ஜாம்நகர் நிகழ்வுகளைத் தொடர்ந்து, தம்பதியினர் லண்டனில் தங்கள் நண்பர்களுக்காக விருந்து வைத்தனர்.

ஜூன் தொடக்கத்தில், அம்பானி குடும்பம் நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்காக ஒரு சொகுசு கப்பலில் இத்தாலியில் இருந்து பிரான்ஸ் வரை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விருந்தினருக்கு வழங்கும் பரிசு
இத்தாலியில் நடைபெற்ற விழாவில் விருந்தினர்களுக்கு ஆடம்பரமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

LV பைகள், தங்க நகைகள், வடிவமைப்பாளர்கள் வைத்து செய்யப்பட்ட காலணிகள் மற்றும் இரவில் அணியும் ஆடைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் திருமணத்திற்கு வருபவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் விதமாக விலைமதிப்பற்ற பல பொருட்களை உள்ளடக்கிய பரிசு பெட்டி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |