நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்! மேடையில் ராமதாஸ் - அன்புமணி வார்த்தை மோதல்
பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பானது.
சிறப்பு பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரியில் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மாநில இளைஞரணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை நியமிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமதாஸ் நியமனம் செய்ததற்கு அன்புமணி ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் உண்டானது.
கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆன ஒருவருக்கு பொறுப்பு வழங்கக்கூடாது என்று அன்புமணி கூறினார்.
நான் ஆரம்பித்த கட்சி
உடனே குறுக்கிட்ட ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகிக்கொள்ளுங்கள்" என ஆவேசமாக கூறினார்.
பின்னர் பேசிய அன்புமணி, பனையூரில் எனக்கென்று தனி அலுவலகம் திறந்திருக்கிறேன், என்னை அங்கு வந்து சந்திக்கலாம் எனக்கூறி தனது செல்போன் எண்ணையும் அறிவித்தார். ராமதாஸ், அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது கட்சியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |