பெண்களுக்காக போராடினால் கைதா? மு.க.ஸ்டாலின் அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சௌமியா அன்புமணி கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அதேபோல் பாமக சார்பில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், தடையை மீறி சௌமியா அன்புமணி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் பொலிஸார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அப்பவே அவர் சாப்பிடாம ஆயிட்டாரு.., VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
கண்டன அறிக்கை
அதில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்;
தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு போராடிய பாட்டாளி மகளிர் சங்கத்தினரை கைது செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |