நூற்றாண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு: அமெரிக்க ஏல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
நியூயார்க்கின் சவுத்பே ஏல நிறுவனம், அரிய மற்றும் மதிப்புமிக்க பொருட்களை ஏலம் விடுவதில் உலகளவில் புகழ்பெற்றது.
அதன் சமீபத்திய அறிவிப்பில், வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய இரண்டு குறிப்பிடத்தக்க பொருட்களை அவர்கள் ஏலத்திற்கு கொண்டு வரவுள்ளனர்.
ஒன்று, சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஒரு சிறிய டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு, மற்றொன்று சஹாரா பாலைவனத்தில் 2023-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய விண்கல்.
கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு
சவுத்பே ஏல நிறுவனத்தின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹத்தான் இது குறித்து பேசுகையில், ஏலம் விடப்படவுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு பூமியில் கண்டறியப்பட்ட நான்கு முழுமையான டைனோசர் எலும்புக்கூடுகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
மற்ற மூன்று எலும்புக்கூடுகள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அரிய கண்டுபிடிப்பு, பழங்கால உயிரினங்களின் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
செவ்வாய் கிரகத்தின் பிரம்மாண்ட விண்கல்
ஏலத்திற்கு வரவிருக்கும் மற்றொரு சிறப்புப் பொருள், சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய விண்கல் ஆகும்.
கசாண்ட்ரா ஹத்தான் குறிப்பிட்டபடி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கற்களிலேயே இதுதான் மிகவும் பெரியது.
விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விண்கல், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய தகவல்களை வெளிப்படுத்தக்கூடும்.
இந்த இரண்டு பொருட்களின் ஏலம், அறிவியல் மற்றும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |