சென்னையை தொடர்ந்து ஆந்திராவை புரட்டி எடுக்கும் மிக்ஜாம் : 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பு
சென்னையை தொடர்ந்து ஆந்திராவை மிக்ஜாம் புயல் புரட்டி எடுக்கும் காட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன.
ஆந்திராவை புரட்டி எடுக்கும் மிக்ஜாம்
சென்னையில் இருந்து விலகி சென்ற புயலானது ஆந்திர மாநிலம் சீராலா- பாபட்லா இடையே கரையை கடக்க இருக்கிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா, உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசி வருகிறது.
இதன் காரணமாக 100 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | Andhra Pradesh: NDRF team present at Bapatla beach as #CycloneMichaung is likely to make landfall today on the southern coast of the state between Nellore and Machilipatnam pic.twitter.com/YwQv0tOsG9
— ANI (@ANI) December 5, 2023
இதனால் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக 10 க்கும் மேற்பட்ட மத்திய மாநில மீட்டு குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காற்று வீசியதால் கடலில் 10 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பி கடலோத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | Tirupati, Andhra Pradesh: TTD Chairman, Tirupati MLA Bhumana Karunakara Reddy and City Commissioner Haritha take stock of Pulavani Gunta and Gollavani Gunta areas which are inundated following rainfall#CycloneMichuang pic.twitter.com/t9lF9LGzIC
— ANI (@ANI) December 5, 2023
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 876 மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |