ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு - மூழ்கிய வீடுகளில் தவிக்கும் மக்கள்!
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 27 பேர் பலியாகியுள்ளனர், இதனால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கி சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மூழ்கிய வீட்டில் தவிக்கும் மக்கள்
தெலுங்கானாவில் தொடர்ந்து பலத்தை மழை பெய்து வருவதால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரு மாநிலங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செப்டம்பர் 2 முதல் 5 வரை கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானாவில் திங்கட்கிழமையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சனிக்கிழமை இரவு முதல் இரு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொண்டன. பெட்ரோல் நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் தெலங்கானாவின் கம்மம், சூர்யாபேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ரயில்கள் ரத்து
தெலுங்கானாவில் கேசமுத்திரம் மற்றும் மஹபூபாபாத் இடையே ரயில் தண்டவாளத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, பல இடங்களில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 10 ரயில்கள் திங்கள்கிழமை திருப்பி விடப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து சாப்ரா, சாப்ரா முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் புது தில்லியிலிருந்து சென்னை வரையிலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிகழும் மீட்பு பணிகள்
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |