மோசமான நபருடன் மகள்களின் புகைப்படங்களை பகிர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ
பிரித்தானிய முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ, மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.
சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரூவால் தலைக்குனிவு
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது. எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் அவர் குறித்த ஏராளமான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவற்றில், ஆண்ட்ரூவுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன.
மகள்களின் புகைப்படங்களை பகிர்ந்த ஆண்ட்ரூ
2008ஆம் ஆண்டு, எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையிலும், அவர் மோசமான பாலியல் குற்றவாளி என தெரிந்தும், தன் மகள்களுடைய புகைப்படங்களை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார் ஆண்ட்ரூ.

இளவரசி பீட்ரைஸ் மலையேறும் புகைப்படமும், இளவரசி யூஜீனி தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்காக சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களும் அவற்றில் அடங்கும்.

இன்னொரு விடயம் என்னவென்றால், பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் தாயான சாரா ஃபெர்குசனும், எப்ஸ்டீன் மோசமான நபர் என தெரிந்தும் தன் மகள்கள் குறித்த விடயங்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆக, பெண்ணொருவர் படுத்துக்கிடக்க, கிட்டத்தட்ட அவர் அருகே ஆண்ட்ரூ நாலு காலில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றும், ஆண்ட்ரூவும் சாராவும் தங்கள் பிள்ளைகள் குறித்து எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்ட விடயங்களும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளதால் ராஜகுடும்பத்தில் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |