பிரித்தானிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள்: அடுத்த பிரதமர் இவரா?
பிரித்தானிய அரசியலில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன.
அடுத்தடுத்து திருப்பங்கள்
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.
இதற்கிடையில், தலைவர் பதவியைப் பிடிக்க 81 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில், ஸ்ட்ரீட்டிங்குக்கு அவளவு ஆதரவு இல்லை பிரதமர் இல்ல வட்டாரம் கூறியிருந்தது.

இந்நிலையில், உண்மையாகவே ஸ்ட்ரீட்டிங் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால், அவர் பிரதமர் பதவியில் போட்டியிட வேறொரு நபருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் பெயர் ஆன்டி பர்னாம். ஆன்டி, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார்.

ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆகவே, அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடமுடியும் என்பதால், அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பது இயலாத விடயம் என கருதப்பட்டது.
ஆனால், அந்த நிலையும் மாறுவது போல் உள்ளது. ஏனென்றால், மேக்கர்ஃபீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஆன்டிக்காக விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது, ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செய்ய உள்ளார். அங்கு இடைத்தேர்தல் நடைபெறும், அதில் ஆன்டி போட்டியிட உள்ளார்.
ஆன்டி மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட வழி கிடைத்துவிடும்.
விடயம் என்னவென்றால், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி ஆன்டிக்கு கடுமையான சவாலாக அமைய உள்ளது.
ஆக, ஆன்டி மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் வெற்றி பெறுவாரா, லேபர் கட்சியின் தலைவராவாரா, அதாவது, பிரித்தானியாவின் பிரதமராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |