முத்தையா முரளிதரனின் சாதனைப் பட்டியலில் இணைந்த அயர்லாந்து பந்துவீச்சாளர்
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அயர்லாந்து வீரர் ஆன்டி மெக்பிரின் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
தாஸ், ரஹீம் சதம்
அயர்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. 
லித்தன் தாஸ் (Litton Das) 128 ஓட்டங்களும், முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 106 ஓட்டங்களும் எடுக்க வங்காளதேச அணி 476 ஓட்டங்கள் குவித்தது.
அயர்லாந்து அணியின் தரப்பில் ஆன்டி மெக்பிரின் (Andy McBrine) 109 ஓட்டங்கள் 6 கொடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேத்யூ ஹம்ப்ரேயஸ், கேவின் ஹோய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆன்டி மெக்பிரின்
ஆன்டி மெக்பிரின் வங்காளதேசத்தில் ஒருமுறைக்கு மேல் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (Muthiah Muralitharan), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து), நாதன் லயன் (அவுஸ்திரேலியா) ஆகியோர் இந்த சாதனையை செய்திருந்தனர். 
இரண்டாம் நாள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லோர்கன் டக்கர் (11), ஸ்டீபன் டொஹினி (2) ஆகியோர் களத்தில் உள்ளனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |