74 பந்துகளில் 135 ஓட்டங்கள்! ருத்ர தாண்டவம் ஆடிய வீராங்கனை..42 ரன்னில் சுருண்ட அணி
மகளிர் பிக்பாஷ் தொடரின் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெக் லென்னிங் 74 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசினார்.
மெக் லென்னிங் வாணவேடிக்கை
வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL போட்டி நடந்து வருகிறது.
One of the best we've ever seen!
— Weber Women's Big Bash League (@WBBL) November 20, 2025
Meg Lanning has her second BIG BASH CENTURY! #WBBL11 pic.twitter.com/MpHnBpoKLq
நாணய சுழற்சியில் வென்ற சிட்னி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, மெல்போர்ன் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீராங்கனைகள் மெக் லென்னிங் (Meg Lanning), ரைஸ் மெக்கென்னா (Rhys McKenna) கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இவர்களின் கூட்டணி 94 பந்துகளில் 159 ஓட்டங்கள் குவித்தது.
220 ஓட்டங்கள் இலக்கு
மெக்கென்னா 34 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். 
அதன் பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்ட லென்னிங், 61 பந்துகளில் அதிரடி சதம் விளாசினார். எதிரணியின் பந்துவீச்சை தெறிக்கவிட்ட அவர், 74 பந்துகளில் 135 ஓட்டங்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர், 22 பவுண்டரிகள் அடங்கும்.
மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது. சியாட்டில், வில்லியர்ஸ் மற்றும் கார்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
42 ஓட்டங்களில் சுருண்ட அணி
அடுத்து களமிறங்கிய சிட்னி அணி 5 ஓவர்களில் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழைகுறுக்கிட்டது. இதனால் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அப்போது 31 பந்துகளில் 127 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த சிட்னி அணி, 7.4 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கிம் கார்த் 4 விக்கெட்டுகளும், சோஃபி டே மற்றும் அன்னபெல் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The lowest total in Sydney Sixers history. #WBBL11 pic.twitter.com/IM1Q5kj9F1
— Weber Women's Big Bash League (@WBBL) November 20, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |