156 ஓட்டங்கள் இலக்கு..106 ஓட்டங்கள் எடுத்தே வென்ற அணி
மகளிர் பிக்பாஷ் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
155 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடந்த WBBL போட்டியில் ஹோபர்ட் மற்றும் மெல்போர்ன் அணிகள் மோதின.
Take on Molly Strano at your own peril!
— Weber Women's Big Bash League (@WBBL) November 20, 2025
Courtney Webb falls in the opening over, giving Strano her 163rd wicket in the competition. #WBBL11 pic.twitter.com/evvXvt4BbY
முதலில் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜார்ஜியா வேர்ஹம் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களும், அலிஸ் கேப்ஸி 24 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களும் விளாசினர்.
ஹெதர் கிரஹாம் 3 விக்கெட்டுகளும், ஸ்ட்ரானோ, லின்சே ஸ்மித் மற்றும் ஹேலே சில்வர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Drama at North Sydney Oval!
— Weber Women's Big Bash League (@WBBL) November 20, 2025
Rain has stopped play with the Hurricanes currently leading the game. #WBBL11 pic.twitter.com/knpHDPF7m1
கேரி அதிரடி
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 12 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் DLS விதிப்படி ஹோபர்ட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நிக்கோலா கேரி (Nicola Carey) 29 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களும், வையட் ஹாட்ஜ் 21 ஓட்டங்களும் விளாசினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |