100வது டெஸ்டில் 100 ஓட்டங்கள்! வரலாறு படைத்த ரஹீம்
Bangladesh Cricket Team
Ireland Cricket Team
Mushfiqur Rahim
By Sivaraj
வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார்.
முஷ்பிகுர் ரஹீம்
டாக்காவில் அயர்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
கேப்டன் 69 பந்தில் 109 ரன் விளாசியும் வீண்! 33.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள்..நியூசிலாந்து மிரட்டல் வெற்றி
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் தற்போதுவரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்துள்ளது.
லித்தன் தாஸ் (Litton Das) 103 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 214 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், 100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் 11வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
100வது டெஸ்டில் சதம் அடித்தவர்கள்
- கோலின் கௌட்ரே (இங்கிலாந்து) - 104 ஓட்டங்கள்
- ஜாவீத் மியாண்டட் (பாகிஸ்தான்) - 145 ஓட்டங்கள்
- கோர்டன் கிரீனிட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்) - 149 ஓட்டங்கள்
- அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 105 ஓட்டங்கள்
- இன்ஸமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) - 184 ஓட்டங்கள்
- ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 120 மற்றும் 143 ஓட்டங்கள்
- கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 131 ஓட்டங்கள்
- ஹஷிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 134 ஓட்டங்கள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 218 ஓட்டங்கள்
- டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 200 ஓட்டங்கள்
- முஷ்பிகுர் ரஹீம் (வங்காளதேசம்) - 106 ஓட்டங்கள்

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US