உள்துறை அமைச்சக வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல்: துருக்கி அரசாங்கம் வெளியிட்ட தகவல்
துருக்கியின் அங்காராவில் உள்ள உள்துறை அமைச்சக கட்டிடத்தின் முன் இரண்டு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
முதல் பயங்கரவாத தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், தாக்குதல்தாரிகளில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இன்னொருவரை அதிகாரிகள் தரப்பு சடலமாக மீட்டுள்ளனர்.
@reuters
வெடிகுண்டு தாக்குதல் சம்பவமானது நாடாளுமன்ற வளாகத்திலும் அமைச்சக கட்டிடங்களிலும் எதிரொலித்துள்ளது. துருக்கிய ஊடகங்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளதுடன், சேதங்களையும் படம் பிடித்து காட்டியுள்ளனர்.
2016க்கு பின்னர் அங்காராவில் முன்னெடுக்கப்படும் முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவென கூறுகின்றனர். அதுவும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு குழுவினர், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
@reuters
உல்ளூர் நேரப்படி பகல் 9.30 மணியளவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் Ali Yerlikaya தெரிவித்துள்ளார்.
37 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர்
மேலும், நாட்டின் கடைசி தீவிரவாதியை ஒடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் முன்னெடுத்த குழுவினை இதுவரை அதிகாரிகள் அடையாளப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
துருக்கியில் சுமார் ஓராண்டுக்கு பின்னர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மத்திய இஸ்தான்புல் பகுதியில் ஒரு பரபரப்பான பாதசாரிகளுக்கான தெருவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 81 பேர்கள் காயங்களுடன் தப்பியிருந்தனர்.
@reuters
குர்து தீவிரவாதிகள் முன்னெடுத்த தாக்குதல் என்றே துருக்கி அரசாங்க அப்போது குற்றஞ்சாட்டியிருந்தது. 2015-2016 காலகட்டத்தில் குர்து போராளிகள், ஐ.எஸ் அமைப்பு மற்றும் சிறு சிறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் துருக்கியின் பல நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்துள்ளனர்.
மார்ச் 2016ல் வாகனம் ஒன்றில் இருந்து வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 37 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |