அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை: அமைச்சரின் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்.
அவர் தன்னுடைய பதிவில், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைகழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புபவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தை அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக்கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.