கடன் வாங்கியதில் தமிழகம் முதலிடம்: யாத்திரையின்போது விளாசிய அண்ணாமலை
இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலமாக ஸ்டாலின் தமிழகத்தை மாற்றியுள்ளார் என அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாத யாத்திரை பயணம்
தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அங்கு கடந்த 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, இன்று சிவகங்கை வந்தபோது திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
திமுக ஆட்சி மீது விமர்சனம்
அப்போது அவர் தமிழகத்தில் திமுக ஆட்சியினை கடுமையாக விமர்சித்தார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
'என் மண் என் மக்கள் யாத்திரையில் நடந்து வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் எல்லா வசதி வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. அவருக்கு ஊதியம், கொடுப்பனவு கிடைக்கிறது.
அமைச்சருக்கான ஊதியம் எதற்கு கிடைக்கிறது என்றால் மக்கள் பணி செய்வதற்கான ஊதியம். அரசியலில் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காகதான் அமைச்சர்களுக்கு ஊதியம். ஆனால், எந்த வேலையும் பார்க்காமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் நான் ஊதியம் கொடுத்து, துறை இல்லாமல் அமைச்சராக வைத்திருப்பேன் என ஸ்டாலின் கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு ஊழலுக்கு திமுகவின் முதல் குடும்பம் உள்ளது என தெரிகிறது.
தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுகிறேன் என கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்தார். உண்மையில் அவர் இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழகம். மக்கள் பெயரை கூறி கடனை வாங்கி, அவர்கள் செல்வம் கொழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மொடலின் பெயர்தான் திராவிட மொடல்' என கடுமையாக சாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |