தமிழக மக்கள் விபரமானவர்கள் என்று உணர்ந்துகொண்டேன்: பாத யாத்திரையில் பேசிய அண்ணாமலை
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து தமிழக மக்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஏழாவது நாள் பாத யாத்திரை
பாத யாத்திரையின் ஏழாவது நாளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலங்குடிக்கு சென்றுள்ளார்.
சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடியில் பயணித்த அண்ணாமலை பல விடயங்கள் குறித்து பேசினார்.
தமிழக மக்கள்
குறிப்பாக தமிழக மக்கள் பற்றி அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு விளக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், தமிழக மக்கள் மிக விபரமானவர்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
மத்திய அரசின் திட்டங்கள் என்ன; அதன் பயன்கள் என்ன; மாநில அரசு செய்வது என்ன என்பதை எல்லாம் அவர்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர்.
மத்திய அரசின் பல திட்டங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர், வாழ்த்துகின்றனர்.
வழியில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு பல்கலையாக எனக்கு தெரிகின்றனர். இதுவரை நான் படித்த விடயங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை; இனி இன்னும் படிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக மக்களிடத்தில் இருக்கின்றன என்பதை மனதார உணர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |