இது புனிதமான இடம்.. நீங்க வரக்கூடாது: தேவாலயத்திற்குள் நுழைய அண்ணாமலைக்கு எதிர்ப்பு
கிறிஸ்துவ ஆலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு
தமிழக மாவட்டமான தருமபுரியில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். நேற்று மாலை மேட்டூரிலிருந்து பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்தார்.
அப்போது வரும் வழியில் அன்னை மேரி தேவாலயத்திற்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார். அங்குள்ள கிறிஸ்துவ இளைஞர்கள் சிலர் அவர் உள்ளே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
என் மக்கள் இறப்பை ஏன் கேட்கவில்லை?
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், என் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை என்று அண்ணாமலையிடம் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இளைஞர்களிடம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அவர்கள், மணிப்பூரில் எங்கள் மக்கள் இறப்பதற்கு பாஜக தான் காரணம். இந்த இடம் புனிதமானது, இங்கே நீங்கள் வரக்கூடாது என ஆவேசமாக பேசினர்.
இதன் பின்னர் , பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து , அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |