பொறுக்கி கூட பேச யோசிக்கும் விடயத்தை பேசியுள்ளார்: அமைச்சரை சாடிய அண்ணாமலை
நாகா இன மக்கள் விவகாரத்தில் பொறுக்கி கூட பேச யோசிக்கும் விடயத்தை அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி பேசியது
திமுக விழா ஒன்றில் பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, "நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் உள்ளனர். உப்பை தின்னும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்க வேண்டும்.
ஒன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 50 பேரின் மரணத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தான் காரணம்" எனக் கூறியிருந்தார்.
அண்ணாமலை ஆவேசம்
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "நாகா இன மக்கள் குறித்து அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பேசியது தவறானது. அவர் பேசிவிட்டு இப்போது அதனை திமுகவினர் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர்.
அநாகரிகமாக பேசுவதில் சிறந்தவர் என்பதில் ஆர்.எஸ்.பாரதிக்கு தங்க மெடல்தான் கொடுக்க வேண்டும். சாலையில் செல்லும் பொறுக்கி கூட பேச யோசிக்கும் விடயத்தை ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
தமிழக காவல்துறை இவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. அவரைக் கைது செய்வதற்கு நாகாலாந்து பொலிஸ் வருவதற்கு தமிழக பொலிஸ் கைது செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, நாகாலாந்து மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த துரோகம் குறித்து தான் பேசினேன் தவிர, மக்களை புண்படுத்தும் நோக்கத்தோடு பேசவில்லை என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |