தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை..., ஓடிவந்து கட்டியணைத்த நிர்வாகி
திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார்.
சாட்டையால் அடித்த அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காலை 10 மணிக்கு மேல் சட்டை அணியாமலும், பச்சை நிற வேட்டி அணிந்தும் அண்ணாமலை வந்தார்.
அப்போது, தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
#Annamalai pic.twitter.com/FfoimoXMSt
— Priya Gurunathan (@JournoPG) December 27, 2024
அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த பாஜக நிர்வாகிகள் வெற்றி வேல், வீர வேல் என்று முழக்கமிட்டனர். மேலும், பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்து அண்ணாமலையை கட்டியணைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |