ரஷ்யாவில் மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம்
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர் கொல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
பழிக்குப் பழி வாங்க உறுதிமொழி எடுத்துள்ள வாக்னர் குழு
தங்கள் தலைவரான Yevgeny Prigozhin கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிக்குப் பழி வாங்க இருப்பதாக மீதமிருக்கும் வாக்னர் குழுவினர் உறுதிமொழி எடுத்துள்ளனர். அதன்படி அவர்கள் விரைவில் மீண்டும் ரஷ்யாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
(Image: Getty Images)
ஆனால், இந்த தகவல் வெளியானதுமே புடின் விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என்கிறார் அமெரிக்க முன்னாள் ராணுவ உளவுத்துறை அலுவலரான Matt Shoemaker.
அதனால், அடுத்த 72 மணி நேரத்தில், மீதமிருக்கும் வாக்னர் குழுவினருக்கு ஆபத்து என்று கூறியுள்ள அவர், குழுவில் மீதமிருக்கும் மற்றவர்களும், வழக்கம் போல, ஆனால், சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்க்காமலே, தற்கொலை, அல்லது ஜன்னலிருந்து விழுந்து உயிரிழக்கலாம் என்கிறார்.
(Image: Telegram)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |