பிரான்ஸ் ஆர்ப்பாட்டங்களின்போது மற்றொரு இளைஞர் பலி: விசாரணை துவக்கம்
பிரான்சில், இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டங்களின்போதே மற்றொரு இளைஞர் கொல்லப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பொலிசார் இளைஞரை சுட்டுக்கொன்றதை எதிர்த்து போராட்டம்
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக பொலிசார் Nahel (17) என்னும் இளைஞரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
Clement Mahoudeau/AFP
இந்த சம்பவம் பிரான்சில் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது, Nahelக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பு போன்ற செயல்களில் இறங்க, பல்லாயிரக்கணக்கான பொலிசார் நாடெங்கும் குவிக்கப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். என்றாலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
மற்றொரு இளைஞர் பலி
இந்நிலையில், Marseille நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது 27 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ரப்பர் குண்டு போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டு அவர் பலியாகியுள்ளார். இந்த ரப்பர் குண்டு நெஞ்சில் தாக்கினால், அது மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும், மரணத்தையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த நபர் பலியாகியுள்ளார். ஆனால், அவர் ஆர்ப்பாட்டக்காரரா, அவர் சுடப்பட்டாரா என்பது குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |