வேகமாக உருகும் பனிக்கட்டிகள்… பசுமையாக மாறும் அண்டார்டிக்கா! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
அண்டார்டிகாவின் பனிக்கட்டியான பகுதிகள் பசுமையான நிலப்பரப்புகளாக மாறி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பசுமையாக மாறும் அண்டார்டிக்கா
கடந்த மூன்று தசாப்தங்களை விட சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாற்றத்தின் வீதம் 30%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1986 முதல் 2021 வரையிலான காலத்தில் அண்டார்டிக் தீபகற்பத்தில் உள்ள தாவரங்களின் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்து நிலையில் தற்போது கிட்டத்தட்ட 12 சதுர கிலோமீட்டருக்கு அதிகரித்துள்ளது.
Scientists have examined satellite images revealing that parts of Antarctica are experiencing a rapid increase in green plant life due to extreme heat events. This alarming trend raises concerns about the shifting landscape on the continent. pic.twitter.com/gbwOD7TENB
— FocuSeaTV - Maritime News (@focuseatv) October 4, 2024
இந்த பத்து மடங்கு உயர்வானது, உலகின் கடைசி எல்லைகளில் ஒன்றான அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பிரித்தானியாவின் Exeter பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் தலைமையிலான ஆராய்ச்சியில், அண்டார்டிக் தீபகற்பத்தின் "பசுமையான" தன்மையை கண்காணிக்க செயற்கைக்கோள் தரவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
மேலும் ஆராய்ச்சி தகவல்களின் இறுதியில், "தாவரங்களின் அடர்த்தியில் இந்த சமீபத்திய முடுக்கம் (2016-2021) அதே காலத்தில் அண்டார்டிகாவில் கடல் பனி நீட்டிப்பில் குறிப்பிடத்தக்க குறைவுடன் ஒத்துள்ளது" என்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
அண்டார்டிகா உலகளாவிய சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வருவதுடன், தீவிர வெப்ப நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த ஆய்வின் முடிவில், அண்டார்டிக் தீபகற்பத்தில் பரவலான பசுமையான போக்கு நிலைபெற்று வருகிறது என்பதை நிரூபிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |