கொரோனா தோற்றம் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட WHO அறிக்கை வெளியானது!
கொரோனா வைரஸ் பெரும்பாலும் வௌவாலிடமிருந்து மற்றொரு விலங்கு மூலமாக மனிதர்களுக்கு பரவியதாக சர்வதேச சுகாதார நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா தோற்றும் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கை, மத்திய சீனாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தது அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவுபொருட்களின் மூலம் வுஹான் நகரில் பரவியது உட்பட கொரோனா தோற்றம் தொடர்பான பல கோட்பாடுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு நியமித்த சிறப்பு குழு மற்றும் சீன விஞ்ஞானிகள் கூறியதாவது, கொரோனா வேறொரு இடத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அது ஒரு அசாதாரண சூழ்நிலையாக இருந்திருக்கும்.
ஏனெனில் அந்த நேரத்தில் வேறு இடங்களில் கொரோனா கண்டறிப்படவில்லை என கூறினர்.
இது 2019 டிசம்பரில் கொரோனா தங்கள் நாட்டில் தொடங்கவில்லை என சீனாவின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றை பொய்யாக்கி உள்ளது.
ஆனால், இந்த அறிக்கை மற்ற கோட்பாடுகளை முற்றிலும் நிராகரிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
அறிக்கையிலிருந்து நான் படித்தவற்றிலிருந்து அனைத்து அனுமானங்களும் வெளிப்படையாக இருக்கிறது, முழுமையான மற்றும் மேலதிக ஆய்வுகள் தேவை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறினார்.
