உலகின் எந்த நாட்டிற்கும் இந்த 3 நபர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல முடியும்: யார் அந்த 3 நபர்கள்?
உலக நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஆகியோர் வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட பாஸ்போர்ட் அவசியமாக தேவைப்படும் நிலையில் இந்த மூன்று நபர்களுக்கு மட்டும் உலகில் எங்கு சென்றாலும் பாஸ்போர்ட் தேவையே இல்லை, அந்த மூன்று நபர்கள் யார் என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.
பாஸ்போர்ட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட அந்த 3 நபர்கள்
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இந்த பாஸ்போர்ட் வழக்கம் செயல்பாட்டில் உள்ளது.
உலக நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆகியோர் தங்கள் நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் ராஜதந்திர பாஸ்போர்ட்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
அப்படி இருக்கையில் உலகில் உள்ள இந்த மூன்று நபர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நபர்களும் உலகின் எந்த நாடுகளுக்கும் பாஸ்போர்ட் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் செல்ல சிறப்பு அதிகாரம் உள்ளது.
அந்த மூன்று நபர்கள் யாரென்றால், பிரித்தானியாவின் மன்னர், ஜப்பானின் ராஜா மற்றும் ராணி ஆகியோர் ஆவர். இவர்கள் மூன்று நபர்களும் உலகின் எந்த நாட்டுக்கும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லும் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு உரிமை
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு முன்னால் ஆட்சியில் இருந்த மன்னர் சார்லஸ் ஆட்சி காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிரித்தானியாவின் மன்னராக இருந்த சார்லஸின் செயலாளர், ஆவணம் வடிவிலான செய்தி ஒன்றை அனைத்து உலக நாடுகளுக்கும் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் அனுப்பி வைத்தார்.
அதிலிருந்து பிரித்தானிய மன்னர்கள் அனைத்து உலக நாடுகளுக்கும் எத்தகைய தடைகளும் இல்லாமல் முழு சுதந்திரம் மற்றும் மரியாதையுடன் சென்று வரக்கூடிய சிறப்பு அதிகாரம் கொண்டு வரப்பட்டது.
இதைப்போலவே 1971ல் ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானின் ராஜா மற்றும் ராணி உலக நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க முடியும் என ஜப்பானின் ராஜதந்திர கோப்புகளில் உள்ளது.
EPA
தற்போது ஜப்பானின் மன்னராக ஹிரோனோமியா நருஹிட்டோ மற்றும் ராணியாக அவரது மனைவி மசாகோ ஓவாடா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |