Apple Festive Sale 2023 தொடக்கம்..தள்ளுபடி விலையில் iphoneகள்
Apple Festive Sale 2023 இந்தியாவில் நேற்று முதல் (அக். 15), தொடங்கியுள்ளது.
இதில் iPhones, iPads, laptops, AirPods போன்ற Apple தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம்.
HDFC Bank Credit Card பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சாதனங்களை ரூ.10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடியாக பெறலாம்.
iphone களின் தள்ளுபடி
Apple Festive Sale 2023 ல் தற்போது ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன் 15 Pro Max மாடலில் 6 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
அதேபோல், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 Plus மாடலில் 5 ஆயிரம் ரூபாயிலும், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 Plus மாடலில் 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி பெறலாம்.
மேலும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE போன்ற பழைய மாடல் ஐபோன்களிலும் சிறப்புத் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
MacBook-ன் தள்ளுபடி
Apple நிறுவனத்தின் MacBook Air M2 13 inch மற்றும் 15-inch, MacBook Pro 13-inch, 14-inch and 16-inch மாடல்கள் மற்றும் Mac Studio போன்ற பல்வேறு MacBook மாடல்களும் விற்பனையில் உள்ளன.
இந்த அனைத்து MacBook மாடல்களிலும், HDFC Bank Credit Card-ஐ பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் தள்ளுபடியைப் பெறலாம்.
இதேபோல், வாடிக்கையாளர்கள் Apple HomePod மற்றும் AirPods Pro HDFC Bank Card மூலம் 2 ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடியுடன் வாங்கலாம்.
இதனுடன், இந்த சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத Apple Music subscription கிடைக்கும்.
Apple அனைத்து பொருள்களுக்கும் ஆறு மாதங்கள் வரை கட்டணமில்லா மாதத் தவணை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |