iPhone 16 சீரிஸ் இந்தியாவில் வெளியாவது எப்போது? கசிந்துள்ள முக்கிய தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 மாடல் செப்டம்பர் 10ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 16 எப்போது வெளியீடு?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான ஐபோன் 16 சீரிஸ் செப்டம்பர் 10ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களை ஆப்பிள் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், சமீபத்தில் கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த திகதியானது வெளியாகியுள்ளது.
Bloomberg வெளியிட்டுள்ள பரிந்துரையில் ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வெளியீட்டு திகதியை ஒட்டி(செப்டம்பர் 10) ஐபோன் 16 சீரிஸின் வெளியீடு திகதி அமையும் என தெரிவித்துள்ளது.
ஐபோன் 16 சிறப்பம்சங்கள்
ஐபோன் 16 சிறப்பம்சங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராவிட்டாலும், கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் சில முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
திரை: 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் திரை, 120Hz புதுப்பிப்பு திறனை கொண்டு இருக்கலாம்.
செயல்திறன்: ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோ A18 சிப்செட் அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும், 16 ப்ரோ மாடல் அதில் கூடுதல் அம்சங்கள் கொண்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
iPhone 16 vs iPhone 16 Pro pic.twitter.com/IHg0zVLsa7
— Apple Hub (@theapplehub) August 13, 2024
பிறந்து 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்: பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பற்றரி: ஐபோன் 16 4006 mAh பற்றரி திறனையும், ஐபோன் 16 ப்ரோ 4,676 mAh பற்றரி திறனையும் கொண்டு இருக்கலாம்.
கேமரா: ஐபோன் 16 ப்ரோ மாடலில் 48 மெகாபிக்சல் Ultra Wide lens கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |