Perplexity AI நிறுவனத்தை விற்கும் முயற்சியில் Apple., போட்டிக்கு நிற்கும் Meta, Samsung
Perplexity AI எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்குவது குறித்து Apple நிர்வாகிகள் உள்நிலை ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
Apple-ன் வாங்கும் மற்றும் இணைய சேவைகள் பிரிவுகளின் தலைவர்கள் Adrian Perica மற்றும் Eddy Cue, AI துறையில் முன்னேறும் நோக்கில் இந்த விவாதங்களை துவக்கியுள்ளனர்.
Perplexity-யை வாங்குவது Apple-க்கு Search Engine உருவாக்கும் முயற்சியில் உதவும் எனத் தெரிகிறது.
தற்போது Google-னுடன் உள்ள 20 பில்லியன் டொலர் வருமான உடன்பாடு எதிர்காலத்தில் முடியக்கூடும் என்ற அச்சத்தில், Apple இந்த மாற்று வாய்ப்புகளை ஆராய்கிறது.
Meta நிறுவனம் ஏற்கனவே Perplexity-யை வாங்க முயன்றாலும், உடன்பாடு நடைபெறவில்லை.
Perplexity, இணையத்தின் தற்போதைய தகவல்களை வைத்து நேரடி பதில்கள் வழங்கும் திறனுடைய AI சேவையாகும். இதனை வாங்கினால், Apple-க்கு OpenAI-யை போட்டியிடும் புதிய Siri உருவாக்கும் வழி கிடைக்கும்.
மேலும், Apple தற்போதும் Perplexity-யுடன் கூட்டாண்மை வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறது - Safari மற்றும் Siri-யில் அதனை இணைக்கும் திட்டங்கள் உள்ளது.
அதே நேரத்தில், Samsung நிறுவனமும் Perplexity-யுடன் புதிய கூட்டாண்மை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இது, Apple-க்கு சவாலாக இருக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple Perplexity AI acquisition, Perplexity AI Apple deal, Apple search engine plans, Apple vs Google AI search, Siri upgrade with AI,, Apple AI startup acquisition, Apple Meta AI talent war, Apple Perplexity partnership, Perplexity Samsung deal, Adrian Perica Eddy Cue Apple AI