iPhone 8 Plus மொடலை Vintage பட்டியலில் சேர்த்த Apple
Apple நிறுவனம் செப்டம்பர் 9-ஆம் திகதி iPhone 17 தொடர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வெளியீட்டிற்கு முன், அதன் பழைய iPhone 8 Plus மொடலை Vintage பட்டியலில் சேர்த்துள்ளது. இது 64GB மற்றும் 256GB மொடல்களுக்கு பொருந்தும்.
Vintage என்றால் அந்த தயாரிப்பு குறைந்தது 5-7 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கவேண்டும்.
7 ஆண்டுகளைக் கடந்ததும், அந்த தயாரிப்பு Obsolete எனப்படும், அதாவது Apple நிறுவனத்தின் அதிகாரபூர்வ சேவைகள் மற்றும் பழுது சரி செய்யும் ஆதரவு நிறுத்தப்படும்.
இதோடு, 11 இன்ச் MacBook Air (2015), 13 இன்ச் MacBook Pro with 4 Thunderbolt 3 ports (2017) மற்றும் 15-இன்ச் MacBook Pro (2017) ஆகிய மூன்று MacBook மொடல்களும் Obsolete பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Obsolete பட்டியலில் உள்ள MacBook-களுக்கு Apple நிறுவனம் பழுது சரி செய்யும் சேவைகளை வழங்காது. ஆனால் சில மொடல்களுக்கு 10 ஆண்டுகள் வரை பேட்டரி சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |