விமான ஏர் ஹோஸ்டஸ் போல அரசு பேருந்திலும் பணிப்பெண்களை நியமிக்க முடிவு.., சர்ச்சை சம்பவம்
விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமனம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்தில் பணி பெண்கள்
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள அரசு சொகுசு பேருந்துகளில், விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்களை நியமனம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, அந்த மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமனம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.
அதாவது, முதன்முதலாக மும்பை மற்றும் புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை அமர்த்தவுள்ளனர்.
இப்பெண்கள், பயணிகள் பேருந்துகளில் ஏறும்போது அவர்களை வரவேற்பதற்கும், பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவதற்கும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
மாநில அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் கூறுகையில், "அரசு பேருந்தின் மோசமான நிலைமைகள் மற்றும் பேருந்து நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை செய்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |