சுவிட்சர்லாந்தில் பிரபலமாகிவரும் கேப்சூல் ஹொட்டல்கள்
சுவிட்சர்லாந்தில், கேப்சூல் ஹொட்டல்கள் என்னும் ஒரு விடயம் பிரபலமாகிவருகிறது.
கேப்சூல் ஹொட்டல்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தில், ட்ரக் சாரதிகள் தங்கள் பயணத்தில் இடையே சாலையோரமாக வாகனங்களை நிறுத்தி வாகனத்திலேயே ஓய்வெடுப்பதற்கு தடை உள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் சிறிய ஹொட்டல்கள் போன்ற ஏதாவது ஒரு இடத்தில்தான் தங்கி ஓய்வெடுக்கவேண்டும்.
ஆக, அந்த சாரதிகளுக்காக, 2019ஆம் ஆண்டு, Roatel என்னும் ஜேர்மன் நிறுவனத்தின் முயற்சியின்பேரில், கேப்சூல் ஹொட்டல்கள் என்னும் திட்டம் துவக்கப்பட்டது.
கண்டெய்னர்களை (shipping containers) சாலையோரமாக பதித்து, சிறு கேப்சூல் ஹொட்டல்களாக மாற்றும் திட்டம்தான் Roatel நிறுவனத்தின் திட்டம்.
இந்த கேப்சூல் ஹொட்டல்களில் தங்குவதற்கு, 49 முதல் 99 யூரோக்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கேப்சூல் ஹொட்டல் திட்டம் சுவிட்சர்லாந்தில் பிரபலமாகிவருகிறது. ஆகவே, இந்த திட்டத்தை சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்ய Roatel நிறுவனம் தயாராகிவருகிறது.
50 கிலோமீற்றருக்கு ஒரு கேப்சூல் ஹொட்டலை அமைக்க, அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |