ஆயுதங்களுடன் வந்த கப்பல்கள்... குண்டு மழை பொழிந்த சவுதி தலைமையிலான கூட்டணி
ஏமனில் உள்ள அரபு கூட்டணி, முகல்லா துறைமுகத்தில் ஆயுதங்களுடன் வந்த கப்பல்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
முகல்லா துறைமுகம்
ஹத்ரமௌத் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிராக தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு (STC) எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து வந்த இரண்டு கப்பல்கள் கூட்டணியின் அங்கீகாரமின்றி முகல்லா துறைமுகத்திற்குள் நுழைந்ததாக கூட்டணி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் தங்கள் கண்காணிப்பு அமைப்புகளை முடக்கிவிட்டு, தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு உதவும் வகையில் அதிக அளவிலான ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் இறக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
முகல்லா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பிற சேதங்களோ ஏற்படவில்லை என்று அரபு கூட்டணி தெரிவித்துள்ளது.
இறக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை குறிவைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கூட்டணி விமானப் படைகள் ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.

அதிகாரத்தை ஒப்படைக்குமாறு
ஆயுதப் பரிமாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹத்ரமௌத் மற்றும் அல்-மஹ்ரா மாகாணங்களில் இருந்து விலகி, உள்ளூர் அதிகாரிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், வார இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளவரசர் காலித் கூறுகையில், தெற்குப் பகுதிப் பிரச்சினை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, ஏமன் மக்களின் ஒருமித்த கருத்து மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமே அது தீர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, சட்டப்பூர்வ அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பு இல்லாமல், எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு யேமன் பிரிவினருக்கும் வழங்கப்படும் எந்தவொரு இராணுவ ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து தடுப்போம் என்று அரபு கூட்டணி எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |