புடினை சந்தித்தபோது ட்ரம்பை கேலி செய்த ஈரான் அமைச்சர்
மத்திய கிழக்கு போரில் வெற்றி பெற்றுவருவதாக ட்ரம்ப் கூறியதை ஈரானிய அமைச்சர் கேலி செய்துள்ளார்.
கிரெம்ளின் ஆதரவு
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்த அவர், போரை முடிவுக்குக் கொண்டுவர கிரெம்ளின் ஆதரவை வழங்குவதாக கூறியதாக தெரிவித்தார்.
மேலும், ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அவர் மத்திய கிழக்கில் நடக்கும் போரில் தாம் வெற்றி பெற்று வருவதாக ட்ரம்ப் கூறியதை கேலி செய்தார்.
ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்?
ட்ரம்பின் கூற்றுகளை மறுத்து, "அப்படியானால், அவர் ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்? வெளிப்படையாக, ஈரான் உலகத்தின் மிகப்பெரிய வல்லரசை எதிர்த்து நிற்கிறது.
மேலும் அவர்கள் தங்களின் ஒரு நோக்கத்தைக் கூட அடையவில்லை. அதனால்தான் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறார். நாங்கள் இப்போது இந்த விருப்பத்தைப் பரிசீலித்து வருகிறோம்" என அராக்சி கூறினார்.

அத்துடன் அமெரிக்காவின் அணுகுமுறைகள், முன்னேற்றம் இருந்தபோதிலும், அதிகப்படியான கோரிக்கைகள் காரணமாக முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அதன் இலக்குகளை அடையத் தவறியதற்குக் காரணமாக அமைந்தன என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |