தேர்தல் சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மதுபான கொள்கை ஊழல்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராக 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், இது சட்டவிரோதமானது எனக் கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்ததால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
அதில் கெஜ்ரிவாலின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதிரடி கைது
அதனைத் தொடர்ந்து இன்று கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு குவிந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.