அர்ஜென்டினாவை வெற்றி பாதைக்கு திருப்பிய மெஸ்ஸி: மெக்சிகோவை வீழ்த்தியதால் ரசிகர்கள் உற்சாகம்
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அர்ஜென்டினா 2-0 மெக்சிகோ
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிறகு, அர்ஜென்டினாவின் உலக கோப்பைக்கான கனவு கடினமானது.
ஆனால் இன்று லுசைல் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது.
Lionel Messi on Instagram: "We had to win today and we were able to do it. There's another final coming up on Wednesday and we have to keep fighting all together. Vamos Argentina!!!" pic.twitter.com/nByFbkOfzZ
— Roy Nemer (@RoyNemer) November 26, 2022
இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணியின் உலக கோப்பைக்கான கனவு பாதை விரிவடைந்துள்ளது.
மெஸ்ஸி, பெர்னாண்டஸ் அடித்த கோல்கள்
போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல்களை அடிக்க கடுமையாக முயற்சி செய்தும் யாரும் முன்னிலை பெற முடியவில்லை.
இதனால் முதல் பாதி 0-0 என்ற சமநிலையில் நீடித்தது, இதே போக்கு போட்டி இறுதி வரை நீடிக்குமானால் இரு அணிகளுக்குமே சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கடிமானகும் என்பதால், இரு அணிகளும் இரண்டாவது பாதியில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Messi took care of business today, but he's not done yet ??? pic.twitter.com/IBrQnZPcQQ
— FOX Soccer (@FOXSoccer) November 26, 2022
அந்த வகையில் போட்டியின் 64வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஒரு அசத்தலான கோல் அடித்தார்.
ஆனால் மெக்சிகோ அணியின் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு முன்னிலையை சமன் செய்ய முடியாமல் தவித்தனர்.
போட்டி நிறைவடைய 3 நிமிடங்களே மீதம் இருந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் என்ஸோ பெர்னாண்டஸ் 87 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து சூப்பர் 16 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.
When you score your first #FIFAWorldCup goal at 21 years old ? pic.twitter.com/u0bdtxrpoo
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
போலந்துடன் மோதல்
அர்ஜென்டினா அணி இதுவரை விளையாடியுள்ள நிலையில் ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
அடுத்து போலந்துடன் நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றால் சூப்பர் 16 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.
Table- பட்டியல்(fifa.com)
ஆனால் குரூப் சி-யில் உள்ள நான்கு அணிகளுக்கும் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு தற்போது சமமாக உள்ளது.
குரூப் சி-யில் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் எந்த அணி வெற்றியை உறுதியாக்குகிறதோ அந்த அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Argentina's celebrations were in sync ? pic.twitter.com/96ezqmRiVf
— B/R Football (@brfootball) November 26, 2022