உலகக் கோப்பைக்கு முன் கசிந்த அர்ஜென்டினா அணியின் பாஸ்போர்ட் விவரங்கள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் அர்ஜென்டினா தேசிய அணியின் முழு வீரர்களின் பாஸ்போர்ட் விவரங்கள் தவறுதலாக வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்திற்கு முன், அதிகாரப்பூர்வ அணிப் பட்டியல் ஊடகங்களுக்கு பகிரப்பட்டபோது, அதில் வீரர்களின் பாஸ்போர்ட் எண்கள் மறைக்கப்படாமல் இருந்தன.
இதில் லயனல் மெஸ்ஸி, லிசாண்ட்ரோ மார்டினஸ், என்சோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட அனைவரின் விவரங்களும் வெளிப்பட்டன.

இந்த தவறுக்கு Road to ’26” என்ற, துருக்கி ஏர்லைன்ஸ் ஆதரவு பெற்ற நிறுவனம் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக, அதிகாரப்பூர்வ சோதனைகளுக்காக பாஸ்போர்ட் எண்கள் சேர்க்கப்பட்டாலும், வெளியிடும் முன் அவை மறைக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அது செய்யப்படவில்லை.
இச்சம்பவம், உலகக் கோப்பை பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது. நிபுணர்கள், ரசிகர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து மோசடி இணைய தளங்கள், பிஷிங், மால்வேர் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், அர்ஜென்டினா அணி 88,000 ரசிகர்கள் முன்னிலையில் ஐஸ்லாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது. காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பிய மெஸ்ஸி, பெனால்டி மூலம் கோல் அடித்து, 38 வயது 11 மாதத்தில் அர்ஜென்டினாவின் மிக வயதான கோல் வீரராக சாதனை படைத்தார்.
இந்த தரவு கசிவு, உலகக் கோப்பை ஏற்பாட்டாளர்களின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |